ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் தூக்கில் தொங்கிய நிலையில் மாலுமி கண்டெடுப்பு

ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை மாலுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.;

Update: 2023-07-27 10:00 GMT

கோப்புப்படம்

கொச்சி,

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் இன்று அதிகாலையில் கடற்படை மாலுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 19 வயதான அந்த மாலுமி பீகாரில் உள்ள முசாபர்பூரை சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போர்க்கப்பலின் பெட்டி ஒன்றில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 'அக்னிவீரர்' அல்ல என்றும் வழக்கமான பணியாளர்களில் ஒருவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் தற்போது கொச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்