சபரிமலை சீசன்: கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.31 கோடி வருமானம்

சபரிமலை சீசனில் டிசம்பர் 31-ந்தேதி வரை கேரள அரசு போக்குவரத்து கழக பஸ்களில் 52 லட்சத்து 4 ஆயிரம் பக்தர்கள் பயணம் செய்துள்ளனர்.

Update: 2024-01-07 20:18 GMT

சபரிமலை,

சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கேரளாவின் பல்வேறு இடங்களில் இருந்து அரசின் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மண்டல பூஜை காலத்தில் இயக்கப்பட்ட பஸ்கள் குறித்து சிறப்பு அதிகாரி டி.சுனில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சபரிமலை மண்டல சீசனில் டிசம்பர் 31-ந்தேதி வரை கேரள அரசு போக்குவரத்து கழக பஸ்களில் 52 லட்சத்து 4 ஆயிரம் பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். பம்பை- நிலக்கல் மற்றும் நிலக்கல்-பம்பை இடையே 1 லட்சத்து 8 ஆயிரத்து 600 முறை பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் மண்டல சீசன் வரை மொத்த வருவாய் ரூ.31 கோடியே 7 லட்சம் ஆகும்.

மகரவிளக்கையொட்டி ஜனவரி 15-ந் தேதி மாநிலத்தின் அனைத்து கேரள அரசு போக்குவரத்து கழக டெப்போக்களில் இருந்தும் 800 பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்