சபரிமலை விமான நிலைய திட்டம் - 579 குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தகவல்
விமான நிலைய திட்டத்தால் மொத்தம் 579 குடும்பங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், அவர்களின் வசதிக்காக கோட்டயம் மாவட்டம் எருமேலியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் ஏற்படும் சமூக பாதிப்பு தொடர்பான இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் விமான நிலைய திட்டத்தால் மொத்தம் 579 குடும்பங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் போது நியாயமான இழப்பீடு மற்றும் மறுவாழ்வு உறுதி செய்யப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.