டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சி!

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.;

Update: 2022-06-09 09:48 GMT

மும்பை,

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது. மேலும் இறக்குமதியாளர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்து வருகிறது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது. இன்று காலை வர்த்தக நேரம் துவங்கியதும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா குறைந்தது.

இதன்மூலம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு இதுவரை இல்லாத அளவாக 77.81 ஆக சரிந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்