கேரளாவில் அரசியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் தனியார் அறக்கட்டளை வழங்குகிறது

படிப்பறிவு அதிகம் உள்ள மாநிலமான கேரளம்தான், அரசியல் வன்முறை படுகொலைகள் அதிகமாக நடைபெறும் மாநிலமாகவும் உள்ளது.

Update: 2022-08-21 20:27 GMT

திருவனந்தபுரம், 

படிப்பறிவு அதிகம் உள்ள மாநிலமான கேரளம்தான், அரசியல் வன்முறை படுகொலைகள் அதிகமாக நடைபெறும் மாநிலமாகவும் உள்ளது.அங்கு இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் பழிக்குப் பழி அரசியலுக்கு பலியாகி இருக்கின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் அரசியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த மங்களம் சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாக அறங்காவலரான டாக்டர் ஆர்.பாலாசங்கர்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.இதில் முதல்கட்டமாக, தகுதிவாய்ந்த 51 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.

முந்தைய வாஜ்பாய் அரசில் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியாக பதவி வகித்த டாக்டர் முரளி மனோகர் ஜோஷிக்கு ஆலோசகராக இருந்தவர் பாலாசங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்