ஆர்.எஸ்.எஸ். பேரணி வழக்கு மார்ச் 17-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஆ.எஸ்.எஸ் பேரணியை அனுமதிப்பது மிகவும் சென்சிட்டிவான விஷயம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டது.;

Update: 2023-03-03 08:33 GMT

புதுடெல்லி,

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆ.எஸ்.எஸ் பேரணியை அனுமதிப்பது மிகவும் சென்சிட்டிவான விஷயம் என்றும் பிர்ச்சினைகள் உள்ள இடங்களில் மட்டுமே பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும், முழுமையாக தடை விதிக்கவில்லை என்றும் பேரணி விவகாரத்தில் முடிவெடுக்கக் கூடிய முழு அதிகாரமும் அரசுக்குதான் உள்ளது என வாதிட்டார்.

அதையடுத்து ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழகத்தில் 50 மாவட்டங்களில் எங்களது பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாக வாதிட்டார். இதை கேட்ட தமிழக வழக்கறிஞர் அதிர்ச்சி அடைந்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கை மார்ச் 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்