அரசு பஸ்களில் பயணிகளிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வாங்கப்படும்

அரசு பஸ்களில் பயணிகளிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வாங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Update: 2023-05-28 21:36 GMT

பெங்களூரு:-

ரூ.2 ஆயிரம் நோட்டு

நாடு முழுவதும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த ரூபாய் நோட்டுகளை வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை வங்கிகளில் கொடுத்து பொதுமக்கள் மாற்றி கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து, பெங்களூருவில் பெட்ரோல் விற்பனை மையங்கள், ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களில் ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்து டிக்கெட் எடுக்க பயணிகள் முயன்றால் வாங்க கூடாது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதாக நேற்று தகவல்கள் பரவியது. இதுபற்றி கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

பயணிகள் டிக்கெட் வாங்கலாம்

இதையடுத்து, கர்நாடக அரசு பஸ்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்குவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அதுபோன்று தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. இதனை பயணிகள் நம்ப வேண்டாம். கே.எஸ்.ஆர்.டி.சி. மற்றும் பி.எம்.டி.சி. பஸ்களில் பயணிகள் ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு போக்குவரத்து கழகம் முழு அனுமதியை வழங்கி இருக்கிறது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தடையும் விதிக்கப்படாத பட்சத்தில், பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை பணிமனையில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் தான் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பெறப்படாது என்று கூறப்பட்டு இருந்தது. அந்த தகவல்கள் தான் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து டிக்கெட் பெற முடியாது என்ற வதந்தி பரவியதும் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்