1 கோடி வீடுகளில் சோலார் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.75,000 கோடி நிதி - மந்திரிசபை ஒப்புதல்

வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2024-02-29 10:53 GMT

புதுடெல்லி,

மத்திய அரசின் 'பிரதான் மந்திரி சூர்யா கர்: முப்தி பிஜிலி யோஜனா' திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளில் மேற்கூரையில் சோலார் பேனல்களை அமைப்பதற்கு ரூ.75,021 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய இன்று மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், ஒரு கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் அமைத்து, 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி ஒவ்வொரு குடும்பமும் 1 கிலோ வாட் மின்சார அமைப்புக்கு ரூ.30,000 மற்றும் 2 கிலோ வாட் மின்சார அமைப்புக்கு ரூ.60,000 மானியம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்