நேரடி மானிய திட்டத்தின் மூலம் ஒரு ஆண்டில் ரூ.50 ஆயிரம் கோடி மிச்சம் - மத்திய அரசு தகவல்

நேரடி மானிய திட்டத்தின் மூலம் 2021-22ல் ரூ.50 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.;

Update: 2023-04-26 13:20 GMT

புதுடெல்லி,

நேரடி மானிய திட்டத்தின் மூலம் மத்திய அரசின் பல்வேறு உதவி திட்டங்கள், மானிய தொகைகள் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. 53 மத்திய அமைச்சரகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 312 திட்டங்களுக்கு இது தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2020-21ல் ரூ.44 ஆயிரம் கோடி மிச்சமானதாகவும், அதே போல் 2021-22ல் ரூ.50 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளதாகவும் மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் அதிகபட்சமாக பொது விநியோக திட்டத்தில் 33,600 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 முதல் 2021 வரை நாடு முழுவதும் 4.2 கோடி போலி ரேஷன் அட்டைகளை ரத்து செய்ததன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. உர மானியத்தில் 8,700 கோடி ரூபாயும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 7,500 கோடி ரூபாயும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்