ஆந்திர பிரதேச விவசாயிகளுக்கு ரூ.3,923 கோடி விடுவிப்பு; முதல்-மந்திரி நடவடிக்கை

ஆந்திர பிரதேசத்தில் 52 லட்சத்து 30 ஆயிரத்து 939 விவசாயிகளுக்கு ஆண்டின் முதல் தவணையாக ரூ.3,923.21 கோடி தொகையை முதல்-மந்திரி ஜெகன் விடுவித்து உள்ளார்.

Update: 2023-06-01 12:31 GMT

கர்னூல்,

ஆந்திர பிரதேசத்தில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் தலைமையிலான அரசில், ஒய்.எஸ்.ஆர். ரைது பரோசா மற்றும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் தொடர்ந்து, 5-வது ஆண்டாக விவசாயிகளுக்கு நிதி உதவி விடுவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி கர்னூல் மாவட்டத்தில் பதிகொண்டா நகரில் இன்று நடந்த நிகழ்ச்சியில், 52 லட்சத்து 30 ஆயிரத்து 939 விவசாயிகளுக்கு இந்த ஆண்டில் முதல் தவணையாக ரூ.3,923.21 கோடி தொகையை முதல்-மந்திரி ஜெகன் விடுவித்து உள்ளார்.

இதனால், தலா ஒரு விவசாயிக்கு ரூ.5,500 நேரடியாக அவரது வங்கி கணக்கில் சேர்க்கப்படும். இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து, பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்-மந்திரி ஜெகன் மோகன், விவசாயிகளின் நலனே, மாநில நலன் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத, ஒய்.எஸ்.ஆர். ரைது பரோசாவுக்கான ஆதரவை 5-வது ஆண்டாக தொடர்ந்து உங்களுடைய அரசு நீட்டித்து உள்ளது.

இந்த உதவியால், மாநிலம் முழுவதும் ஒவ்வொரு விவசாயியிக்கும் நாங்கள் தலா ரூ.61,500 தொகையை விடுவித்து உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்