சென்னை உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்திற்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு - மத்திய மந்திரி அமித்ஷா

வெள்ளத்தடுப்பு திட்டத்துக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

Update: 2023-06-13 12:47 GMT

புதுடெல்லி,

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்துக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமித் ஷா தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், மாநில பேரிடர் மேலாண்மைத் துறை மந்திரிகள் , தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா,

சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, புனே, அகமதாபாத் ஆகிய 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்துக்காக 2500 கோடி ரூபாயும், மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்தவும் நவீனப்படுத்தவும் 5,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.825 கோடி தேசிய நிலச்சரிவு அபாயக் குறைப்புத் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்