ரூ.12 லட்சம் கரண்ட் பில் - அதிர்ந்துபோன டிவி மெக்கானிக்

புதுச்சேரியில் ஒரு மாதத்திற்கான மின் கட்டணமாக 12 லட்சத்து 26ஆயிரம் ரூபாய் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-09-14 12:04 GMT

புதுச்சேரி,

புதுச்சேரியில் ஒரு மாதத்திற்கான மின் கட்டணமாக 12 லட்சத்து 26ஆயிரம் ரூபாய் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த டி.வி. மெக்கானிக்கான சரவணன் என்பவரது வீட்டிற்கு கடந்த மாத மின் உபயோகத்திற்கான மின் கட்டணம் 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் வந்ததை கண்டு அதிச்சியடைந்துள்ளார்.

இது தொடர்பாக மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சரவணன், ரீடிங் எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்