கர்ப்பிணியிடம் தவறான அறிக்கை வழங்கிய ஸ்கேன் சென்டருக்கு ரூ.10 லட்சம் அபராதம் - கோர்ட்டு அதிரடி

ஒடிசாவில் குழந்தையின் குறைபாடை கண்டுபிடிக்காத பரிசோதனை மையத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-29 10:25 GMT

கோப்புப்படம்

புவனேஸ்வர்,

ஒடிசாவில் குழந்தையின் குறைபாடை கண்டுபிடிக்காத பரிசோதனை மையத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பகாலத்தில் பரிசோதனை செய்த போது குழந்தை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் கை, கால்கள் இல்லாமல் குழந்தை பிறந்தது என்றும் கூறி பெண் ஒருவர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு 3 முறை பரிசோதித்தும் தவறான அறிக்கையை வழங்கியிருக்கிறது என கடிந்து கொண்டதுடன் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்