வந்தே பாரத் ரெயிலின் கழிவறைக்குள் சென்ற நபர்: நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் கடுப்பான சக பயணிகள்...!
திருவனந்தபுரம் சென்ற வந்தே பாரத் ரெயிலின் கழிவறைக்குள் சென்ற இளைஞர், நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார்.;
திருவனந்தபுரம் ,
காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்ட வந்தே பாரத் ரயிலின் கழிவறைக்குள் சென்ற இளைஞர், நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சிரமத்திற்கு ஆளான சக பயணிகள், ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் அங்கு வந்த ரெயில்வே போலீசார், கதவை தட்டியும் இளைஞர் வெளியே வராததால், கதவை உடைத்து அவரை வெளியேற்றி கைது செய்தனர்.
உடலில் பல காயங்களுடன் மும்பையைச் சேர்ந்த ஷரண் என்ற இளைஞரை ஆர்பிஎஃப் போலீசார் கைது செய்தனர். கதவைத் தாழ்ப்பாள் போட்டது மட்டுமின்றி, கைப்பிடியையும் உள்ளே இருந்து கயிற்றால் கட்டியிருந்தார்.
காசர்கோட்டில் இருந்து ரெயிலில் ஏறிய அவர், கழிவறையை உட்கார ஆக்கிரமித்திருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. அவர் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.