பழமை வாய்ந்த பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

தொடர் கனமழையால் பழமை வாய்ந்த பள்ளியின் மேற்கூரை அடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.;

Update: 2022-11-07 16:47 GMT

மங்களூரு:-

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டலாவில் கொல்நாடு கிராமத்தின் குளலுவில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 93 மாணவர்கள் படிக்கின்றனர். மேலும் 6 வகுப்பறைகள் உள்ளது. இதற்கிடையே அப்பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழைக்கு பள்ளியில் ஒரு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழும் அபாயம் இருந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் பள்ளியின் ஒரு கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லாத உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்