பஞ்சாப் எல்லையில் சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்
எல்லைப்பகுதியில் கடந்த நான்கு நாட்களில் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய மூன்றாவது சம்பவம் இதுவாகும்.;
அமிர்தசரஸ்,
பஞ்சாபில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், போதைப்பொருளை ஏற்றிச் சென்ற ஆளில்லா டிரோன் விமானம் எல்லை பாதுகாப்புப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.
இன்று இரவு சுமார் 8:30 மணியளவில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செக்டரில் உள்ள எல்லைப் பகுதியான கலாம் டோகர் பகுதியில் 183 வது பட்டாலியனைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் ஒரு முரட்டு பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என்று எல்லை பாதுகாப்புப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த எல்லைப்பகுதியில் கடந்த நான்கு நாட்களில் ஆளில்லா விமானத்தை இடைமறித்து சுட்டு வீழ்த்திய மூன்றாவது சம்பவம் இதுவாகும்.