பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து ஓய்வுபெற்ற அரசு ஊழியரை மிரட்டி ரூ.20 லட்சம் பறிப்பு

பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து ஓய்வுபெற்ற அரசு ஊழியரை மிரட்டி ரூ.20 லட்சம் பறித்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-11-21 18:45 GMT

பெங்களூரு:

ெபண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து ஓய்வுபெற்ற அரசு ஊழியரை மிரட்டி ரூ.20 லட்சம் பறித்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

உல்லாச வீடியோ

பெங்களூரு எலகங்கா நியூ டவுன் பகுதியில் வசித்து வருபவர் நாகேஷ் (வயது 60). பெங்களூரு வளர்ச்சி ஆணைய ஊழியராக பணியாற்றிய இவர், கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். இவருக்கு சிறுவயது முதலே பெண் ஒருவர் தோழியாக இருந்து வருகிறார். அந்த பெண் ஜெயநகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நாகேஷ், அடிக்கடி அந்த பெண்ணை சந்திக்க அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

மேலும் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நாகேசும், பெண்ணும் உல்லாசமாக இருப்பது பற்றி பெண்ணின் நண்பரான முகமது ஜவுத்தினுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் பெண்ணின் வீட்டில் கேமராவை பொருத்தி, அவர்கள் உல்லாசமாக இருந்ததை பதிவு செய்ததாக தெரிகிறது.

ரூ.20 லட்சம் பறிப்பு

இந்த நிலையில், முகமது ஜவுத்தின் நாகேஷ் மற்றும் அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்த வீடியோவை காண்பித்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார். இதனை பார்த்து 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பணம் கொடுக்காவிட்டால் வீடியோவை உறவினர்களுக்கு அனுப்புவதுடன், சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்துபோன நாகேஷ் ரூ.10 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால், முகமது ஜவுத்தின் கூடுதல் பணம் கேட்டு நாகேசுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து அவர் தனது ஐபோன், விலையுயர்ந்த கைக்கெடிகாரம் என ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் கொடுத்துள்ளார். மேலும் பல்வேறு தவணைகளில் மேலும், ரூ.7½ லட்சத்தை கொடுத்துள்ளார்.

'ஹனிடிராப்' முறையில்...

இந்த நிலையில் முகமது ஜவுத்தின், தொடர்ந்த நாகேசிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதனால், நாகேஷ் இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதனை அறிந்ததும் முகமது ஜவுத்தின் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் 'ஹனிடிராப்' முறையில் நாகேசிடம் அந்த நபர் பணம் பறித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக நாகேசின் பெண் தொழியிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்