பெங்களூருவில் சாலை மேம்பாட்டு பணிகளை இந்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும்

பெங்களூருவில் சாலை மேம்பாட்டு பணிகளை இந்த மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-10-14 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பெங்களூருவில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் துஷார் கிரிநாத் பேசியதாவது:-

தீபாவளி பண்டிகை, கர்நாடக ராஜ்யோத்சவா போன்ற விழாக்கள் விரைவில் வர உள்ளன. மேலும் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதையொட்டி சில சாலை மேம்பாட்டு பணிகளை இந்த மாத இறுதிக்குள் அதாவது வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதாவது, சிவானந்த சர்க்கிளில் முதல் ரேஸ்கோர்ஸ் சந்திப்பு வரையில் மேம்பால பணிகளை வருகிற 23-ந் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.

கே.ஜி.ரோட்டில் மைசூரு வங்கி சர்க்கிளில் இருந்து மெஜஸ்டிக் வரையிலான சாலை மேம்பாட்டு பணிகளை வருகிற 31-ந் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். மோகன்குமார் ரோட்டில் மத்திகெரே மெயின் ரோட்டில் இருந்து ரெயில்வே துணை சாலை வரையிலான சாலை பணிகள், டொம்ளூர் மேம்பாலத்தில் இருந்து ஈஜிபுரா வரையிலான வெளிவட்டச்சாலை பணிகள், என்.ஆர்.சாலை மேம்பாட்டு பணிகள் ஆகியவற்றை வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

இவ்வாறு துஷார் கிரிநாத் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்