உடல்நிலை தொடர்ந்து மோசம்: மேல் சிகிச்சைக்காக லாலு பிரசாத் டெல்லி எய்ம்ஸ் கொண்டு செல்லப்பட்டார்...!

லாலு பிரசாத் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Update: 2022-07-06 17:19 GMT

புதுடெல்லி,

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக ஜாமினில் உள்ளார்.

இதனிடையே, பாட்னாவில் உள்ள வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு மாடிப்படியில் இருந்து லாலு பிரசாத் தவறி விழுந்தார். இதில், லாலுவின் கால் மற்றும் தோள்பட்டை பகுதியில் முறிவு, காயம் ஏற்பட்டது,

இதனை தொடர்ந்து பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபப்ட்டு வந்தது.

இந்நிலையில், லாலுவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில் மேல்சிகிச்சைக்காக டெல்லிக்க்கு கொண்டு செல்லப்பட்டார். பாட்னாவில் இருந்து லாலு பிரசாத் இன்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்