இறைச்சிக்காக சரக்கு வாகனத்தில் கடத்திய 5 மாடுகள் மீட்பு

விட்டலாவில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக சரக்கு வாகனத்தில் கடத்திய 5 மாடுகள் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-17 18:45 GMT

மங்களூரு:-

மாடு கடத்தல்

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டலா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அலிக்கே மூல்யா பகுதியில் இறைச்சிக்காக மாடுகளை கடத்துவதாக இந்து அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இந்து அமைப்பினர் 3 மோட்டார் சைக்கிள்களில் சென்று மாடுகளை கடத்தி சென்ற சரக்கு வேனை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் சரக்கு வேனில் இருந்த 4 பேரை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள்.

பின்னர் இதுபற்றி விட்டலா போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

4 பேர் கைது

பின்னர், போலீசாரிடம் அவர்கள் 4 பேரையும் இந்து அமைப்பினர் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் சரக்கு வேனை சோதனை செய்தபோது, அதற்குள் 5 மாடுகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கைதான 4 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த இப்ராகிம், மூசா, கன்யானாவை சேர்ந்த ஜலால், ஹமீது என்பதும், அவர்கள் விட்டலா பகுதியில் மாடுகளை விலைக்கு வாங்கி இறைச்சிக்காக கேரளாவுக்கு கடத்தி ெசன்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 5 மாடுகளையும் போலீசார் மீட்டு கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரக்கு வாகனமும் பறிமுதல் ெசய்யப்பட்டது.

போலீஸ் விசாரணை

இதற்கிடையே, மாடு கடத்தி சென்றவர்களை தாக்கியதாக 3 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்