குடியரசு தின விழா - பங்கேற்க அமெரிக்க அதிபருக்கு அழைப்பு

2024 ஜனவரி 26-ல் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க அமெரிக்க அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-20 16:09 GMT

புதுடெல்லி,

2024 குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2024-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதியன்று நாட்டின் குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்சிட்டி வெளியிட்டுள்ள செய்தியில்,

அடுத்தாண்டு ஜனவரி 26-ம் தேதி நடக்க உள்ள இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்