32 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாலியல் பலாத்கார முயற்சி; மாமா மீது போலீசில் பெண் புகார்

உத்தர பிரதேசத்தில் 32 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த மாமா மீது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

Update: 2022-09-18 15:17 GMT


அலிகார்,


உத்தர பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் பன்னாதேவி பகுதியை சேர்ந்த 43 வயது பெண் போலீசில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், 11 வயது சிறுமியாக இருக்கும்போது அவரது மாமா தொடர்ச்சியாக பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதுபற்றி சிறுமி, அவரது தாயாரிடம் கூறியுள்ளார். ஆனால், பேசாமல் இரு என பதில் வந்துள்ளது. இதனை பயன்படுத்தி கொண்ட அந்த மாமா, சிறுமி 2011-ம் ஆண்டில் திருமணம் முடியும் வரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ராணுவ வீரரான கணவர் விருப்ப ஓய்வு பெற்று சொந்த தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர், உறவுக்காரரான மாமா வீட்டுக்கு போக கூப்பிடும் போதெல்லாம் அவரது மனைவி அதற்கு மறுத்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இறுதியாக மாமா வீட்டுக்கு சென்றபோது, அதனை பயன்படுத்தி அந்த பெண்ணிடம் தவறாக நடக்க மாமா மீண்டும் முயற்சித்து உள்ளார். இந்த முறை அந்த பெண், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

ஆனால், திருமண வாழ்க்கையை அழித்து விடுவேன் என்றும் பெண்ணின் கணவரை போலி வழக்கில் சிறையில் தள்ளி விடுவேன் என்றும் அந்த மாமா கூறியுள்ளார். இதனால், அந்த பெண் தனது கணவரிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக நடந்த விசயங்களை புரிந்து கொண்ட அவரது கணவர், தனது மனைவிக்கு ஆதரவான தேவையான அனைத்து உதவிகளையும் செய்து உள்ளார். அதன்பின் அரசு வலைதளத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து இந்த வழக்கை அலிகார் போலீசார் விசாரணைக்கு எடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்