பங்காருபேட்டையில் கட்டப்பட்ட மணிக்கூண்டு அகற்றம்
பங்காருபேட்டையில் கட்டப்பட்ட மணிக்கூண்டை அகற்றி போலீசார் இரவில் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர்.;
கோலார் தங்கவயல்
கோலார் பஸ் நிலையம் அருகே மணி கூண்டு (கிளாக் டவர்) உள்ளது. பழமையான இந்த மணி கூண்டில் பச்சை கொடியை ஏற்றி வைத்து ஒரு சமுதாயத்தினர் வழிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் அந்த மணி கூண்டை சுற்றி தேசிய கொடியை சுற்றி, கொடியை ஏற்றி வைத்தனர்.
இதையடுத்து அந்த இடத்தில் சர்ச்சைகுரிய வகையில் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் பங்காருபேட்டை நியூ டவுன் பகுதியில் கோலார் மணி கூண்டு போன்று, ஒரு மணிகூண்டு கட்டப்பட்டது.
இந்த மணி கூண்டால் அந்த பகுதியில் சர்ச்சை எழுந்தது. இந்த மணி கூண்டு பார்ப்பதற்கு ஒரு குறிபிட்ட சமுதாயத்தினரின் வழிப்பாட்டு தலம் போன்று இருந்தது. இதனால் அந்த பகுதியில் மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.
இதுகுறித்து பங்காருபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற போலீசார் அந்த மணி கூண்டை இடித்து தரைமட்டமாக்கினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதனால் அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.