ஆந்திராவில் விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம்; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி

ஆந்திராவில் விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-28 16:27 GMT

பெங்களூரு:

ஆந்திர மாநிலம் சித்தூரில் கடந்த 24-ந் தேதி நடந்த சாலை விபத்தில் பெங்களூரு சிவாஜிநகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டா் அவினாஷ், போலீஸ்காரர் அனில் முல்லிக் பலியாகி இருந்தார்கள். இந்த விபத்து குறித்து பெங்களூருவில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் பலியான சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்தில் படுகாயம் அடைந்த மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் தீக்சித்திற்கு பெங்களூருவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சாலை விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் அவினாஷ் மற்றும் போலீஸ்காரர் அனில் முல்லிக் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் தீக்சித்திற்கு ஆகும் சிகிச்சை செலவை அரசே ஏற்கும். இதுபோன்று விபத்தில் போலீசார் பலியாவது, ஒட்டு மொத்த போலீஸ் துறைக்கே மிகுந்த வேதனையை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்