குடிநீர், கழிவுநீர் தொடர்பான குறைகேட்பு கூட்டம்

குடிநீர், கழிவுநீர் தொடர்பான குறைகேட்பு கூட்டம் இன்று நடக்கிறது.

Update: 2022-11-04 18:45 GMT

பெங்களூரு: குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் வாரியம் சார்பில் மாதந்தோறும் மக்கள் குறைகள் கேட்கப்பட்டு, அவை சரிசெய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் சார்பில் இன்று(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் காலை 10 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் செல்போன் மூலம் மக்களிடம் குறைகள் கேட்கும் கூட்டம் நடக்கிறது. குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் தங்கள் குறைகளை அதில் பதிவு செய்யலாம். அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்