கர்நாடக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

ரூ.500 கோடி அபராதத்தை ரத்து செய்ய கூறிய கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்து பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2022-12-03 21:00 GMT

பெங்களூரு:-

பெங்களூருவில் சந்தபுரா ஏரி உள்ளது. நகரில் உள்ள பெரிய ஏரிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ஏரிகளை முறையாக பராமரிப்பு செய்யாமல் கர்நாடக அரசு அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு தெரியவந்தது. இதுகுறித்து ஆணையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஏரியை பாதுகாப்பதில் அரசு தவறியது தெரிந்தது. இதையடுத்து மாநில அரசு, ரூ.500 கோடி இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும், அந்த தொகையை ஏரியில் மாசு ஏற்படுத்திய ஆலைகள், குடியிருப்புகளிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டது. அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாநில அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், அபராத தொகையான ரூ.500 கோடியை ஒதுக்குவதற்கு பதிலாக வளர்ச்சி பணிகளுக்கு அதை செலவிடலாம் எனவும் கூறி இருந்தது. அதனை விசாரித்த தீர்ப்பாயம், கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், அந்த அபராத தொகையை விரைவாக செலுத்தவும் உத்தரவிட்டது. மேலும், அபராத தொகையை கொண்டு ஏரியை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தீர்ப்பாயம் தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்