தார்வார் மாவட்ட வளர்ச்சி குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி ஆலோசனை

தார்வார் மாவட்ட வளர்ச்சி குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி ஆலோசனை நடத்தினார்.;

Update: 2022-10-03 18:45 GMT

உப்பள்ளி;

தார்வார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பிரகலாத் ஜோஷி பேசுகையில், தார்வார் மாவட்ட வளர்ச்சி பணிகளில் எந்த குறையும் இருக்கக்கூடாது.

வளர்ச்சி பணிகள் செய்வதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய, மாநில அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கு சரியாக சென்றடைய வேண்டும். விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசு சமூக நலத்துறை சிறப்பு நிதியில் சமுதாய பவன் கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்தும் இன்னும் பணி தொடங்கவில்லை என புகார் வந்துள்ளது. சமுதாய பவன் கட்டும் பணியை அதிகாரிகள் உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும்.

கனமழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் கலெக்டர் மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்