பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அரசு அதிரடி

பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2024-03-14 16:06 GMT

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்தவகையில், சென்னையில் தொடர்ந்து 663-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 விற்கப்படும் நிலையில் ரூ.100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் டீசல் லிட்டருக்கு ரூ.94.24 விற்கப்படும் நிலையில் ரூ.92.34 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்