கேரளாவில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

கேரளாவில் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-02 09:07 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை முதல் மிகக்கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு மாவட்டங்களிலும் மிகக்கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை மாநிலம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இன்று 4 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2018ம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை போன்று பாதிப்பு ஏற்படாதவாறு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்