பாஜக அரசு முன்கூட்டியே நடத்தினாலும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயார் - பாரதிய ராஷ்டிர சமிதி அறிவிப்பு

மத்திய பாஜக அரசு தெலுங்கானாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக மாநிலத்தை ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி குற்றம் சாட்டியுள்ளது.;

Update: 2023-01-29 23:58 GMT

ஐதராபாத்,

மத்திய பாஜக அரசு தெலுங்கானாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக மாநிலத்தை ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.டி.ராமாராவ் கூறுகையில், 'தெலுங்கானாவுக்கு எந்த புதிய நிறுவனங்களோ, நிதியோ மத்திய அரசு அறிவிக்கவில்லை. மாநில பிரிவினையின்போது கொடுத்த வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை' என தெரிவித்தார்.

மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்தினால், சட்டமன்ற தேர்தலுடன் அதையும் சந்திக்க தயார் எனக்கூறிய கே.டி.ராமாராவ், அவர்களுக்கு தைரியம் இருந்தால் நாடாளுமன்றத்தை கலைக்கட்டும் எனவும் சவால் விட்டார்.

தனது கார்பரேட் நண்பர்களின் கடன்களை மட்டுமே மத்திய அரசு தள்ளுபடி செய்வதாகவும், ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்தை நோக்கி செல்வதாகவும் அவர் குறை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்