நிலவை அடைந்து விட்டோம்: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதே இஸ்ரோவின் அடுத்த இலக்கு - மணிப்பூர் விஞ்ஞானி சொல்கிறார்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதே இஸ்ரோவின் அடுத்த இலக்கு என மணிப்பூர் விஞ்ஞானி நிங்தவுஜம் ரகு சிங் கூறியுள்ளார்.

Update: 2023-08-26 00:07 GMT

கோப்புப்படம் 

கொல்கத்தா,

நிலவை வெற்றிகரமாக அடைந்துள்ள சந்திரயான்-3 திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளில் மணிப்பூரை சேர்ந்த நிங்தவுஜம் ரகு சிங் என்பவரும் ஒருவர். சுமார் 2 ஆண்டுகளாக வீட்டையும், குடும்பத்தினரையும் மறந்து இந்த பணிகளில் ஈடுபட்டிருந்த அவர், திட்டம் வெற்றியடைந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், 'சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நிகழ்வு, இந்தியாவின் சிறந்த தருணங்களில் ஒன்று' என உற்சாகம் பொங்க கூறினார்.

மேலும் அவர், 'சூரியனை ஆய்வு செய்வதற்கும், ககன்யான் திட்டத்தின் கீழ் இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புதற்கும் அமைக்கப்பட்டுள்ள இந்திய விண்வெளி திட்டங்களின் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கமே இந்த நிலவில் சந்திரயான்-3 தரையிறக்கம் ஆகும்' என்றும் தெரிவித்தார்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதே இஸ்ரோவின் அடுத்த இலக்கு என கூறிய விஞ்ஞானி நிங்தவுஜம் ரகு சிங், இந்த பணிகளில் அனைவரும் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்