கிரிப்டோ கரன்சியை தடை செய்ய ரிசர்வ் வங்கி பரிந்துரை - நிர்மலா சீதாராமன்

மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 12ந்தேதி வரை நடைபெற உள்ளது.;

Update: 2022-07-18 09:03 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த தொடர் ஆகஸ்டு மாதம் 12ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 18 அமர்வுகள் இடம்பெறும் என கூறப்பட்டு உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்தநிலையில், இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் வருவாய் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் எம்.பி திருநாவுக்கரசரின் ஜிஎஸ்டி வசூல் ஒப்பீடு குறித்த கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

தொடர்ந்து திருமாவளவன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அதில்,

உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது. இந்தியாவில் மட்டும் கிரிப்டோ கரன்சியை தடை செய்தால் முழுமையான பலன் கிடைக்காது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்