ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.;
டெல்லி,
2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.