மைனர் பெண்ணை கற்பழித்து திருமணத்திற்கு மறுத்தவர் கைது

மைனர் பெண்ணை கற்பழித்து திருமணத்திற்கு மறுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-24 16:35 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கோகுல்ரோடு போலீசார் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 16 வயது மைனர் பெண். அதே பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீநிதி என்கிற ஹோல்கார் கோல்வேகர்(வயது 22). இவருக்கும், அந்த மைனர் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீநிதி அந்த மைனர் பெண்ணிடம் திருமண ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவித்தார். அப்போது அதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டார். பின்னர் அந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி தொடர்ந்து அவர் அந்த மைனர் பெண்ணை கற்பழித்து வந்தார்.

மேலும் அவர் மைனர் பெண்ணை திருமணம் செய்யவும் மறுத்துவிட்டார். இதுபற்றி பாதிக்கப்பட்ட மைனர் பெண் தனது தாயிடம் கூறினார். அவர் இதுபற்றி கோகுல்ரோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீநிதியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்