கற்பழிப்பு குற்றவாளிகள் விடுதலைக்கு ஐ.ஐ.எம். பேராசிரியர்கள் எதிர்ப்பு
கற்பழிப்பு குற்றவாளிகள் விடுதலைக்கு ஐ.ஐ.எம். பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பெங்களூரு: குஜராத்தில் கற்பழிப்பு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி நன்னடத்தை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக அந்த அரசு தெரிவித்துள்ளது. ஆனால் குஜராத் மாநில அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மேலும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அதுபோல் பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில்(ஐ.ஐ.எம்.) பணியாற்றி வரும் 54 பேராசிரியர்களும் போராட்டம் நடத்தினர். அவர்கள் கல்வி நிறுவன வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் அவர்கள் குஜராத் அரசுக்கு எதிராகவும், கற்பழிப்புக்கு ஆளான பெண்ணுக்கு நீதி கேட்டும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.