பெண் கற்பழித்து கொலை: மது போதையில் வாலிபர் வெறிச்செயல்

மது போதையில் பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2024-04-05 02:40 GMT

கோப்புப்படம் 

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 55 வயது பெண், கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2-ந்தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற பெண் திரும்பி வரவில்லை. குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வரதராஜா லே-அவுட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் நிர்வாண நிலையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. இதுபற்றி அறிந்ததும் அம்ருதஹள்ளி போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணை கற்பழித்து கொலை செய்தது உத்தரபிரதேசத்தை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. கடந்த 2-ந் தேதி வரதராஜா லே-அவுட் அருகே உள்ள மதுக்கடையில் வாலிபர் மதுகுடித்து உள்ளார். அப்போது அந்த பெண்ணும் கடைக்கு வந்து மது அருந்தி உள்ளார். பின்னர் அந்த பெண் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பெண் தனியாக செல்வதை அறிந்த அந்த வாலிபர், அப்பெண்ணை கட்டிடத்திற்குள் தூக்கி சென்று கற்பழித்ததுடன், கழுத்தை நெரித்தும், அவரை அடித்தும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. குடிபோதையில் அந்த வாலிபர் வெறிச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

 

Tags:    

மேலும் செய்திகள்