டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது...!

டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.;

Update: 2023-08-07 16:46 GMT

புதுடெல்லி,

டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) மீது மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. இந்தநிலையில் டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு மாநிலங்களவையில் நடைபெற்றது. இதனையடுத்து மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவானது. மாநிலங்களவையில் 8 மணி நேர விவாத்திற்கு பிறகு மசோதா நிறைவேறியது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்