ராஜஸ்தானில் 123 ஆண்டுகள் இல்லாத அளவு ஜூன் மாதம் அதிக மழை பதிவு

ராஜஸ்தானில் 123 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் அதிக மழை பெய்துள்ளது.

Update: 2023-07-04 19:21 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் 123 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஜூன் மாதத்தில் அதிக மழை பெய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜூன் மாதத்தில் மாநிலத்தில் மொத்த மழையளவு 156.9 மி.மீ. ஆகும். இது சராசரியை விட 185 சதவீதம் அதிகமாகும்.

மேலும் 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என்று ஜெய்ப்பூர் வானிலை ஆய்வுமைய இயக்குநர் ராதேஷ்யம் சர்மா தெரிவித்தார்.1996 ஆம் ஆண்டில், ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 122.8 மிமீ மழை பதிவாகியிருந்தது.

கிழக்கு ராஜஸ்தானில் சராசரியை விட 118 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. மேற்கு ராஜஸ்தானில் ஜூன் மாதத்தில் சராசரியை விட 287 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது என்று சர்மா கூறினார்.

"பிபர்ஜாய்" புயலின் தாக்கம் காரணமாக, ஜூன் 16-20 வரை, மாநிலத்தின் தென் பகுதிகளான ஜலோர், பாலி, பார்மர், ராஜ்சமந்த் சிரோஹி மற்றும் அஜ்மீர் மாவட்டங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த காலகட்டத்தில், ஜலோர் மாவட்டத்தில் 400.5 மி.மீ மழை பெய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்