கடன் பிரச்சனை: அல்வாவில் விஷம் கலந்து குடும்பத்தோடு தற்கொலை முயற்சி - மனைவி, மகன் உயிரிழப்பு

ராஜஸ்தானில் கடன் பிரச்சனை காரணமாக ஒருவர் அல்வாவில் விஷம் கலந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது மனைவி, மகன் உயிரிழந்தனர்.

Update: 2023-08-27 23:52 GMT

கோப்புப்படம்

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடன் பிரச்சனை காரணமாக 30 வயது நபர் ஒருவர் அல்வாவில் விஷம் கலந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது மனைவி மற்றும் மகன் உயிரிழந்தனர்.

ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் சர்மா (வயது 30). வாடகை வீட்டில் வசித்து வந்த அவருக்கு கடன் பிரச்சனை மற்றும் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அவர், அல்வாவில் விஷம் கலந்து குடும்பத்தினருக்கு கொடுத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் சர்மாவின் மனைவி சாக்ஷி (வயது 28), மற்றும் 5 மாத மகன் அதர்வ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் சர்மாவும் அவரது மகள் நியாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்