அடங்காத அத்தை அட்டகாசம்...! மருமகனை கொலை செய்த மாமா...! ஒட்டகத்தில் கொண்டு சென்ற உடல்...!

அத்தையால் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. பிரிந்து வாழவும் விருப்பமில்லை. அதனால் கவுரா தேவி ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-25 09:42 GMT

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ள செருனா காவல் நிலையப் பகுதியில் தலித் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.கொலை செய்யபட்டவர் தனது அத்தையுடன் தவறான தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் ஜிலே பகுதியை சேர்ந்தவர் பெயர் உத்ரம் தாலுராம். இவரது மனைவி கவுரா தேவி. இவர்களது உறவினர் குஷால் மேக்வால் . அதாவது இவரது அத்தைதான் கவுரா தேவி. ஆரம்பத்தில் பெரிதாக இல்லாவிட்டாலும், நாளடைவில் குஷாலுக்கு தன்னுடைய அத்தையின் மீது ஈர்ப்பு வர ஆரம்பித்து விட்டது.

அத்தை என்றும் பாராமல் நெருங்கி பழகினார். இதனை அத்தையும் ஏற்று கொண்டு உள்ளார். இவர்களின் கள்ளக்காதலும் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வந்துள்ளது. மாமா வீட்டில் இல்லை என்றாலே, குஷால் குஷியாகிவிடுவார். இருவரும் வெளியே சென்றும் தனிமையில் இனிமை கண்டு வந்துள்ளனர்.

ஒருநாள் மனைவியின் நடத்தை மீது கணவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. இறுதியில் அந்த கள்ளக்காதல் விஷயத்தை அறிந்து உக்கிரம் அடைந்தார் உத்ரம் தாலுராம் மனைவியை கண்டித்தார். எச்சரித்தார். கெஞ்சிப் பார்த்தார்.

ம்.. ஹும் எதையுமே கவுரா தேவி காதில் போட்டுக் கொள்ளவில்லை. தொடர்ந்து மருமகனுடன் காதலை தொடர்ந்தார். இதனால், குஷால் மீது கோபமடைந்தார். தாலுராம் , குஷாலை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி, சம்பவத்தன்று தன்னுடைய தோட்டத்துக்கு வருமாறு குஷாலை அழைத்து சென்றார் . அந்த தோட்டத்திலேயே வைத்து கொடூரமாக அடித்து கொலை செய்து உள்ளார்.

அதற்கு பிறகு, உடலை ஒரு ஒட்டகத்தின் மீது வைத்துகிராமத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் கொண்டு போய் வீசினார். காலை நேரத்தில், குஷால் சடலமாக ரோட்டோரம் விழுந்து கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும் தகவல் சொன்னார்கள்.போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணையை ஆரம்பித்தனர். விசாரணையில் உயிரிழந்த இளைஞரின் அந்தரங்க பகுதியும் வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது மேக்வால் மீது சந்தேகம் வந்ததால், அவரையும் பிடித்து விசாரித்தனர். இறுதியில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

தன்னுடைய மருமகன் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்பது தெரிந்ததுமே, அத்தையால் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. பிரிந்து வாழவும் விருப்பமில்லை. அதனால் கவுரா தேவி ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டதும், இதை கேள்விப்பட்டு அத்தை தற்கொலை செய்து கொண்டதும், பினாகர் பகுதியையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்