உறவினர் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியபோது விபத்து; 4 பேர் பலி

உறவினர் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் வீடு திரும்பியபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2022-09-17 11:47 GMT

ஜெய்ப்பூர்,

மத்திபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த சிலர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உறவினர் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் நேற்று இரவு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த காரில் மொத்தம் 12 பேர் பயணித்தனர்.

ராஜஸ்தானின் சித்தோர்ஹர் மாவட்டம் மங்கல்வாட் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்