தமிழகம், புதுவையில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யுமென இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. மேலும், தமிழகம், புதுவை மற்றும் கர்நாடகாவிலும் ஒருசில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், கேரளா மற்றும் கர்நாடகாவின் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.