பயணிகள் ரெயில் சேவையால் லாபம் இல்லை; மத்திய ரெயில்வே இணை மந்திாி
பயணிகள் ரெயில் சேவையால் லாபம் இல்லை என்றும், மக்களின் வசதிக்காகவே இயக்குகிறோம் என்று மத்திய ரெயில்வே இணை மந்திாி ராவ்சாகேப் தான்வே கூறினார்.;
மும்பை,
ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் செல்லும் வகையில் இருந்த ரெயில் சேவை தற்போது நடுத்தர மற்றும் வசதியானவர்களுக்காக மாறி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைந்து வருவதே இதற்கு உதாரணம் என்று ஏழை பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இந்தநிலையில் பயணிகள் ரெயில்களை இயக்குவதால் ரெயில்வேக்கு லாபம் எதுவும் கிடைப்பதில்லை என ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் தன்வே கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
தினசரி ரெயில்களை இயக்குவதால் ரெயில்வேக்கு எந்த லாபமும் கிடைப்பது இல்லை. ஒரு ரூபாய் செலவு செய்தால் 55 பைசா நஷ்டமாகிறது. பயணிகள் ரெயிலை இயக்குவதால் எந்த லாபமும் இல்லை. அதனால் நஷ்டம் தான் ஏற்படுகிறது. ஆனால் மோடி அரசு லாபத்துக்காக வேலை செய்யவில்லை. மக்களின் வசதிக்காக இதுபோன்ற சேவைகளை இயக்க வேண்டும் என மோடி கூறுகிறார்.பயணிகள் ரெயிலை இயக்குவதால் ஏற்படும் நஷ்டத்தை, சரக்கு ரெயில் சேவை, மற்ற வருவாய் மூலம் சரிகட்ட முயற்சி செய்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.