நின்றுகொண்டிருந்த ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்து - ரெயில்வே ஊழியர் பலி
நின்றுகொண்டிருந்த ரெயில் மீது சரக்கு ரெயில் மோதிய விபத்தில் ரெயில்வே ஊழியர் உயிரிழந்தார்..;
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் ஷாதொல் மாவட்டம் சிங்க்பூர் ரெயில்நிலையம் அருகே இன்று நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதியது.
இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது. மேலும், இந்த விபத்தில் ரெயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.