ராகுல்காந்தி நாட்டிற்கு பெரும் அவமானமாக மாறியுள்ளார் - மத்திய சட்ட மந்திரி கடும் விமர்சனம்

ராகுல்காந்தி நாட்டிற்கு பெரும் அவமானமாக மாறியுள்ளார் என்று மத்திய சட்ட மந்திரி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2022-12-17 07:47 GMT

புதுடெல்லி,

பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, சீனா போருக்கு தயாராகும்போது இந்தியா தூங்கிக்கொண்டிருக்கிறது. அச்சுறுத்தலை மத்திய அரசு தவிர்த்து வருகிறது. 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துக்கொண்டது. 20 இந்திய வீரர்களை கொன்றுள்ளது. அருணாச்சலபிரதேசத்தில் நமது வீரர்களை சீனா தாக்கியுள்ளது' என்றார்.

இந்நிலையில், ராகுல்காந்தியின் கருத்துக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிரண் ரிஜிஜூ டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ராகுல்காந்தி இந்திய ராணுவத்தை அவமதித்தது மட்டுமின்றி நாட்டின் நற்பெயருக்கும்களங்கம் விளைவிக்கிறது.

ராகுல்காந்தி காங்கிரசுக்கு மட்டும் பிரச்சினை அல்ல... அவர் நாட்டிற்கும் மிகப்பெரிய அவமானம். இந்திய ராணுவத்தை நினைத்து மக்கள் பெருமைபடுகின்றனர்' என்றார்   

Tags:    

மேலும் செய்திகள்