ராகுல்காந்தி தகுதி நீக்கம் ரத்து - காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்

ராகுல்காந்தியின் தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Update: 2023-08-07 06:08 GMT

புதுடெல்லி,

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளதால், அவரது எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வந்தது. இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் இன்று திரும்ப பெற்றுள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆகியுள்ளார். இதனால், நாளை தொடங்க உள்ள மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்க இருக்கிறார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லம் முன்பு தொண்டர்கள் மேளதாளத்துடன், பொய்க்கால் குதிரை, நடனம், பட்டாசுகள் வெடித்து மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டதை இந்தியா கூட்டணி கட்சியினர் கொண்டாடினர். மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்