ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் பெருமை கொள்கிறது - யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவரின் மகளுக்கு ராகுல் காந்தி பாராட்டு!

யுபிஎஸ்சி தேர்வில் 45வது ரேங்க் பெற்ற காங்கிரஸ் தலைவரின் மகளுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2022-05-31 10:05 GMT

புதுடெல்லி,

யுபிஎஸ்சி தேர்வில் 45வது ரேங்க் பெற்ற காங்கிரஸ் தலைவரின் மகளுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "சத்தீஸ்கர் பிரதேச காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறையின் தலைவரான சுஷில் ஆனந்த் சுக்லாவின் மகள் ஹ்ரத்தா, யுபிஎஸ்சி தேர்வில் 45வது ரேங்க் பெற்றுள்ளார்.

சத்தீஸ்கர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது. முழு அர்ப்பணிப்புடனும் நாட்டிற்காக உழையுங்கள், உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்தார்.


இந்த ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெண்களே பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரையும் ராகுல் காந்தி பாராட்டினார்.



Tags:    

மேலும் செய்திகள்