ராகுல்காந்தி நாளை வயநாடு பயணம்

வயநாடு எம்.பி. பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்வார் என்று பேசப்பட்டு வரும் நிலையில் அவர் அங்கு செல்கிறார்.

Update: 2024-06-10 22:45 GMT

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். இந்நிலையில், அவர் நாளை (புதன்கிழமை) வயநாடு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொண்டு, வயநாடு எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்வார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், அவர் வயநாடு செல்கிறார்.

அவரது வருகையை முன்னிட்டு, கேரள சட்டசபையை நோக்கி நாளை காங்கிரஸ் கூட்டணி நடத்த திட்டமிட்டு இருந்த கண்டன பேரணி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்