ராகுல்காந்தி விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார் - ஹரீஷ் ராவத்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் வருவார் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-28 16:16 GMT

Image courtesy: PTI 

புதுடெல்லி,

நாட்டின் முதுபெரும் கட்சியான காங்கிரஸ், கடந்த 2014, 2019 என தொடர்ந்து இரு நாடாளுமன்ற தேர்தல்களில் அடுத்தடுத்து படுதோல்வியைத் தழுவியது. கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக காங்கிரசிலிருந்து விலகி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் உயரதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. வெளிநாட்டில் இருந்தவாறு சோனியா காந்தியும், ராகுல், பிரியங்காவும் காணொலிக்காட்சி வழியாக கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. உட்கட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராகுல்காந்தி விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவார். காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என கட்சி தொண்டர்கள் அனைவரும் நம்புகிறோம் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்