டெல்லியில் பஸ் டிரைவர்கள், நடத்துனர்களின் குறைகளை கேட்டறிந்த ராகுல்காந்தி
எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி டெல்லி சரோஜினி நகர் பஸ் பணிமனைக்கு சென்றார்.;
புதுடெல்லி,
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, டெல்லி மாநகர பஸ்சில் பயணித்தார். டெல்லி சரோஜினி நகர் பஸ் பணிமனையில் ஒட்டுநர்கள், நடத்துனர்கள், மார்ஷல்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இது தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த பதிவில், நமது ஜனநாயக சமூகத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் ஒவ்வொரு பிரிவினரையும் ராகுல் காந்தி சந்தித்து அவர்களுக்காக குரல் எழுப்பி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.